வரதட்சணை

 வரதட்சணை கொடுமை வழக்கில் சமாதானம் ஆகலாமா?

வரதட்சணை கொடுமை வழக்கில்,

கணவன், மனைவி ஒத்து கொண்டால்,

தண்டனை தேவை இல்லை - உச்ச

நீதிமன்றம் தீர்ப்பு....................

கற்பழிப்பு, கொலை வழக்குகளை,

பார்ட்டி ஒத்து கொண்டால் முடிக்க

முடியாது, ஆனால்,

வரதட்சனை கொடுமை வழக்கு, NON-

COMPOUNDABLE குற்றமாக

இருந்தாலும்,

பார்ட்டி ஒத்து கொண்டால்,

அதை ஏற்று கொண்டு, quash

செய்யலாம், தண்டனை கொடுக்க

தேவை இல்லை என்றும்

சொல்லி உள்ளது.

Justices Ranjana Desai and N V

Ramana கொண்ட அமர்வு நீதிமன்றம்,

குற்றவியல் சட்டபிரிவு 320 இல்

சொல்லியபடி, COMPOUNDABLE

குற்றங்களை மட்டும்,

பார்ட்டி களுக்குள் ஏற்பட்ட

சமரசத்தை பின்பற்றி, நீதிமன்றம்

உத்தரவு வழங்க வேண்டும்

என்று இருந்தாலும், உயர்நீதிமன்றத்திற்கு quash செய்ய,

அதாவது குற்றவியல்

வழக்கை நடத்தாமலே, குற்றவியல்

நடைமுறை சட்டம் பிரிவு 482 இன் படி,

தள்ளுபடி செய்யலாம்

என்று கூறியுள்ளது. இந்த குற்றம்,

இரு தனி நபர் சார்ந்தது. தனி மனித

ஒழுக்கம் மற்றும் மிக பெரிய

குற்றங்களுக்கும் இதற்கும்

வித்தியாசம் உள்ளது.

சமீபத்தில் கூட, உச்ச நீதிமன்றம்,

Manohar Singh vs. State of Madhya

Pradesh & Anr, என்ற வழக்கில்

பார்ட்டி களுக்குள், வெளிப்படையான,

ஒத்திசைவு இருந்தால், கிரிமினல்

வழக்கை தள்ளுபடி செய்ய முடியும்

என்று கூறி உள்ளது. தற்போது கூட,

உச்ச நீதிமன்றம், டௌரி வழக்கில்

யாரையும் உடனடியாக கைது செய்ய

கூடாது, தேவைபட்டால், குற்றவியல்

நடைமுறை சட்டம் பிரிவு 41 இல்

கூறியவற்றை பின்பற்றி,

தேவைபட்டால் மட்டுமே,

ஒருவரை கைது செய்ய வேண்டும்

என்று கூறி உள்ளது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்,

இவ்வாறன வழக்கில், மாப்பிள்ளையின்

பெற்றோரை விடுதலை செய்து விட்டு,

மாப்பிள்ளை மட்டும் ஆறு மாத

தண்டனை அனுபவிக்க வேண்டும்

என்று கூறி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

மாப்பிள்ளை 2.5 லட்சம் பணமும்,

வழக்கு செலவும்

பெண்ணுக்கு தருவதாக சொல்லி, பெண்

ஏற்று கொண்டுள்ளார். ஆனால், மத்திய

பிரதேச அரசு வழக்கறிஞர், இந்த

வழக்கை தள்ளுபடி செய்ய

கூடாது என்று சொல்லி,

மாப்பிள்ளைக்கு ஆறு மாத

சிறை தண்டனை விதித்துள்ளது. இந்திய

தண்டனை சட்ட பிரிவு 498-A வில்,

குறைந்த பட்ச தண்டனை ஏதும்

சொல்லப்படவில்லை. ஆனால்,

வரதட்சனை தடுப்பு சட்ட பிரிவு 4 இல்,

குறைந்த பட்ச தண்டனை ஆறு மாதம்

என்று உள்ளது. புகார் கொடுத்த

பெண்ணே சமாதானத்திற்கு வரும்போது,

மாப்பிள்ளைக்கு தண்டனை கொடுக்க

தேவை இல்லை என்று,

உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வலுக்கட்டாய உடலுறவு

மனைவியுடன் வலுக்கட்டாய உடலுறவு பலாத்காரமாகாது